மலையாள நடிகைக் கடத்தல் வழக்கில் நான்காவது முறையாக திலீப்புக்கு ஜாமீன் மறுப்பு! | Actor Dileep's bail is cancelled for the fourth time

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (18/09/2017)

கடைசி தொடர்பு:20:15 (18/09/2017)

மலையாள நடிகைக் கடத்தல் வழக்கில் நான்காவது முறையாக திலீப்புக்கு ஜாமீன் மறுப்பு!

இளம்பெண் கடத்தல் மற்றும் பாலியல் கொடுமை செய்தல் ஆகியவற்றை மேற்கோள்காட்டி கேரள நீதிமன்றம் நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. திலீப்  குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் அதிக தண்டனையைப் பெறக்கூடும் என்றும் தெரிகிறது.

கேரள மாநிலம் அங்கமாலி நீதிமன்றம் திலீப்பின் ஜாமீன் மனுக்களை நிராகரித்தது இது நான்காவது தடவையாகும். திலீப்பின் ஜாமீன் மனுக்களை ஏற்கெனவே அங்கமாலி மற்றும் கேரள உயர் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. இந்த ஆண்டு ஜூலை மாதம் நடிகர் திலீப்  கைது செய்யப்பட்டார். திலீப்பின் நண்பரும் நடிகருமான நாதிர்ஷாவின் முன் ஜாமீன் மனுவும் நீதிமன்றத்தின் மூலமாகத் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த சனிக்கிழமை நீதிமன்ற தனி அறையில் சுமார் ஒன்றரை மணி நேரம் நடிகை வழக்கு தொடர்பாக விசாரணை நடந்தது. அப்போது நடிகையின் வழக்கில் நிர்வாணப் படத்தைக் காப்பி செய்தது மற்றும் கூட்டுச் சதி செய்தது என்ற குற்றங்களுக்காக திலீப்பை போலீஸ் கைது செய்து குற்றவாளி என்று விசாரணையை முடித்துக்கொண்டது. இன்னும் குற்றம் நிரூபிக்கப்படாதபோது, திலீப் 65 நாள்களுக்கும் மேல் சிறையில் இருக்கிறார். அதனால் அவருக்கு  ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், திலீப்பின் தரப்பு வாதிட்டது.

ஆனால், எதிர்த்தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தில் நடந்து வருகிறது. திலீப்  இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் வெளியே வந்தால் சாட்சிகளைக் கலைக்கக்கூடும். மேலும், சினிமாத் துறையினர்கள் இன்னும் திலீப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையிலும் அவருக்கான மாஸ் இன்னும் குறையவில்லை. எனவே திலீப்புக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்த்தரப்பு வாதிட்டது.

இந்நிலையில் வழக்கு இன்று நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது திலீப்பின் ஜாமீன் மனு நான்காவது முறையாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. நடிகையின் வழக்கு விசாரணையை போலீஸார் விரைவில் முடித்துவிட்டு, வரும் அக்டோபர் முதல் வாரத்தில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய தீவிரம் காட்டி வருகிறார்கள். குற்றப்பத்திரிகையில் திலீப்புக்கு சுமார் 20 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் வகையில் இருக்கும் என போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close