ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது!

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருந்ததாக சென்னையில் சாகுல் ஹமீது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு


ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. தொடக்கத்தில் ஈராக் மற்றும் சிரியாவில் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, பின் உலகின் பல்வேறு நாடுகளில் தாக்குதல் நடத்தியது. ஐ.எஸ் அமைப்புக்கு உலகம் முழுவதும் ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, இந்தியாவிலும் ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.


இதுதொடர்பாக, என்.ஐ.ஏ தானாக முன்வந்து விசாரணையில் இறங்கியது. இதையடுத்து, கேரளா மற்றும் தமிழகத்தில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகப் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக, சென்னை ஓட்டேரிப் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


சாகுல் ஹமீது ஐ.எஸ் அமைப்பில் ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!