வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (18/09/2017)

கடைசி தொடர்பு:07:50 (19/09/2017)

சாம்சங், ஒன் ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை ஓரம்கட்டிய ஆப்பிள் X

 

ஐபோன்

ஆண்ட்ராய்டு மொபைல்களோடு ஒப்பிடும்போது கொஞ்சம் லேட்டாக வந்தாலும் பர்ஃபாமென்ஸ் விஷயத்தில்தான் எப்போதும் டாப் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது ஆப்பிள். எத்தனை ஜிபி ரேம் இருந்தாலும், புதிய பிராஸசர்கள் பயன்படுத்தப்பட்டாலும், ஆண்ட்ராய்டு மொபைல்கள் அடிக்கடி ஹேங் ஆகி அப்படியே நின்றுவிடும். அதேவேளையில் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் ஹேங்கிங் பிரச்னை என்பது எப்பொழுதாவது ஒரு தடவைதான் இருக்கும். பெரும்பாலான ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆக்டாகோர் பிராஸசர்கள் பயன்படுத்தப்படும் நிலையில், ஆப்பிள் 7 வரை தனது மொபைல்களில் அதிகபட்சமாக குவாட்கோர் பிராஸசர்களையே பயன்படுத்தியது. Geekbench எனப்படும் மொபைல் பிராஸசர்கள் பர்ஃபாமென்ஸ் தரவரிசைப்பட்டியலில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 மற்றும் கேலக்ஸி S8 மொபைல்களுக்கு அடுத்ததாக ஒன்ப்ளஸ் 5 இடம்பிடித்திருந்தது. அண்மையில் வெளியான ஆப்பிள் x ல் Apple A11 Bionic ஹெக்சா கோர் பிராஸசர் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல் இடத்தில் இருந்த இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்களை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்திருகிறது ஆப்பிள் x.