வெளியிடப்பட்ட நேரம்: 19:36 (18/09/2017)

கடைசி தொடர்பு:07:49 (19/09/2017)

தினகரன் - திவாகரன் திருச்சியில் ஆலோசனை ?

 

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை நீட் தேர்வுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் அணி சார்பில் திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில், திருச்சிக்குச் சரியாக 5.15 மணிக்கு வந்த தினகரன், திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். அங்கு தினகரன் முக்கியமான நிர்வாகிகளைச் சந்தித்தார்.

தினகரன்

அதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் அதே ஹோட்டலில் ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ள அவர், தனது அறையில் திவாகரனுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி, இனி பி.ஜே.பிதான் எங்களுக்கு எதிரி. அவர்களுடன் இனி எப்போதும் சேர மாட்டோம் எனக் கூறியுள்ளதாலும், அமைச்சர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக சபாநாயகர் அறிவிக்கப்பட்டுள்ளதாலும் பெரும்பரபரப்பு நிலவுகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க