Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தூத்துக்குடியில் 2 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்: முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் வெடி வெடித்துக் கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ., சுந்தரராஜன் மற்றும் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ., உமா  மகேஷ்வரி ஆகியோர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை, இந்த 2 தொகுதிகளின் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் வெடி வெடித்துக் கொண்டாடினர். 

sundara rajan & uma maheshwari

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ., சுந்தரராஜன் மற்றும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ., உமா மகேஷ்வரி ஆகிய இருவரும் ஆரம்பத்திலிருந்தே தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துவந்தனர். தினகரன் முதன்முதலாக மதுரை, மேலூரில் நடத்திய பொதுக்கூட்டத்துக்கு அவரின் ஆதரவாளர்களைத் திரளாக அழைத்துச்சென்று, தினகரனிடம் பாராட்டுப்பெற்றவர்கள். அதன் பிறகு, கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனை நீக்கி, மாவட்டத்தை வடக்கு மாவட்டம் தெற்கு மாவட்டம் என இரண்டாகப் பிரித்து, வடக்கு மாவட்டச் செயலாளராக சுந்தரராஜனை அதிரடியாக அறிவித்தார். அதோடு, உமா மகேஷ்வரிக்கு மாநில மகளிரணியிலும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. 

ஓட்டப்பிடாரத்தில் வெடி வெடித்து கொண்டாட்டம்

இந்நிலையில், தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் இன்று அறிவித்ததும், எடப்பாடி – ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளர்களான ஓட்டப்பிடாரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., மோகன், ஓட்டப்பிடாரம் மெயின் பஜாரிலும் விளாத்திகுளம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன், விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பும் தன் ஆதரவாளர்களுடன் வெடி வெடித்துக் கொண்டாடினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement