Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தகுதிநீக்கம் செய்யப்பட்டது 18 பேரா?, 19 பேரா? - அரசிதழ் கிளப்பிய சர்ச்சை!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசிதழில், 19 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சட்டசபை


தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை, சபாநாயகர் தனபால் இன்று தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து, தினகரன் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது. இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் நாளை அவசர ஆலோசனை நடத்துகின்றனர். அதேபோல, நாளை மறுநாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டமும் நடக்கிறது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை தமிழகம் வருகிறார். இதனிடையே, எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாகத் தேர்தல் ஆணையத்துக்கு, பேரவைச் செயலாளர் பூபதி கடிதம் அனுப்பினார். இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகள் காலியாக இருப்பதாக வெளியான அறிவிப்புகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்டது.

ஆனால், அரசிதழில் 18 எம்.எல்.ஏ-க்களுக்குப் பதிலாக 19 எம்.எல்.ஏ-க்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. அதாவது, தினகரன் அணியிலிருந்து, முதல்வர் எடப்பாடி அணிக்குத் தாவிய ஜக்கையன் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது. இதனால், சர்ச்சை எழுந்தது. இதனிடையே, "ஜக்கையன் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. அவர் அளித்த விளக்கத்தையடுத்து, அவர் நீக்கம் செய்யப்படவில்லை" என்று சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்துள்ளார்.

அரசிதழ்

அரசிதழ்

அரசிதழ்

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement