Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஜஸ்டிஸ் லீக்' படத்தில், 'வளர்ந்த' வொண்டர் வுமனைக் காணலாம்!' - கால் கேடட் நம்பிக்கை

ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹீரோ ஜானர் படங்களுக்கு, அங்குள்ள ரசிகர்களுக்கு மட்டுமன்றி, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் வெளியான 'வொண்டர் வுமன்' படமே அதற்கு சாட்சி. தமிழ்நாட்டிலும் நல்ல வசூலைக் குவித்தது.

'வொண்டர் வுமன்' கால் கேடட்

படத்தில், அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த கால் கேடட், பலருக்கும் பிடித்தமான சூப்பர் ஹீரோவாகத் திகழ்ந்தார். குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோவாக மாறினார். இதைத் தொடர்ந்து, சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இவர், 'எனக்குள் இருக்கும் வொண்டர் வுமன் நன்றாக வளர்ந்துவிட்டார். அந்தக் கதாபாத்திரத்துக்கு மேலும் மெருகேற்றியிருக்கிறேன். என்னுடைய எதிரிகளைப் பற்றியும் நான் நன்றாகப் புரிந்துகொண்டேன். இதன் பிரதிபலிப்பை, வெளியாக இருக்கும் 'ஜஸ்டிஸ் லீக்' படத்தில் காணலாம்'  என்று கூறியுள்ளார். 

வொண்டர் வுமனைத் தவிர 'பேட்மேன்', 'அக்வாமேன்', 'சைபார்க்', 'தி ஃப்ளாஷ்' போன்ற சூப்பர் ஹீரோக்களும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். சூப்பர்மேனும் இவர்களோடு இணைவார் என்ற வதந்திகளும் வெளியாகியிருக்கிறது. ஸாக் ஸ்னைடர் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் இப்படம், வரும் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement