Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பா.ஜ.க-வுடன் இனி எப்போதும் எங்களுக்குத் தொடர்பில்லை - மதுரையில் புகழேந்தி அதிரடி

கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளரும் தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி, இன்று மதுரை வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சபாநாயகர்  நடவடிக்கை எடுத்துள்ளார். சரியான நபர் என்று சொல்லப்பட்ட சபாநாயகர், தவறான நோக்கத்துடன் எங்கள் எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொலைசெய்துள்ளார்.

புகழேந்தி

இவரை, முதல்வர் வேட்பாளராகச் சொன்னதை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன். இந்த சபாநாயகர் மீது தி.மு.க நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது, எங்கள் எம்.எல்.ஏ-க்கள்தான் காப்பாற்றினார்கள்.  அதற்கு நன்றிக் கடனாக,  இன்று18 பேரை நீக்கியுள்ளார். அன்று அவரைக் காப்பாற்றினோம். இன்று அவரே வெளியேற்றியுள்ளார். பதவிநீக்கம் செய்யப்பட்டவர்களில் எட்டு பேர் தலித் எம்.எல்.ஏ-க்கள்.

இந்த ஜனநாயகப் படுகொலைக்குக் கண்டனம்  தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ராஜினாமா செய்தார்கள் என்றால், இந்த ஆட்சியே இல்லை'' என்றார். பின்னர் செய்தியாளர்கள், ''நீங்கள் தி.மு.க ஆட்சிக்கு வருவதற்குத் துணை போகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே'' என்றதற்கு, ''கடந்த முறை பன்னீர்செல்வம் சட்டசபைக்கு வந்தபோது, தி.மு.க-வினர்  கைதட்டி வரவேற்றார்கள். அப்படி என்றால், பன்னீர்செல்வம் தி.மு.க. ஆதரவாளரா? ஆனால் ஒன்று, தமிழகத்தில் அ.தி.மு.க அல்லது தி.மு.க என திராவிடக் கட்சிகள்தான் ஆட்சிக்கு வரவேண்டும். வேறு எந்த மாமியார் சாமியார்களும் ஆட்சிக்கு வரமுடியாது. இனி எக்காலத்திலும் பி.ஜே.பி-யுடன் எங்களுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement