Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் வான்வெளிப் பூங்கா அமைக்கப்பட்டுவருகிறது. - அமைச்சர் சம்பத்

தொழில் வசதி சட்டம் மற்றும் விதிகள் அறிமுகக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. மாநில தொழில்துறை அமைச்சர் சம்பத் பேசும்போது, '' தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக நாட்டிலேயே மிக அதிகமான மற்றும் திறன்வாய்ந்த மனிதவளத்தைக்கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.  இங்கு நிலவும் அமைதியான சூழல் மற்றும் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் வளர்ச்சிக்கும், தொழில் முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாகவும் பாதுகாப்பான மாநிலமாகவும் திகழ்கிறது.  உலக முதலீட்டாளர்கள் சந்திப்பை மீண்டும் 2018-ம் ஆண்டு நடத்துவதற்கு  அரசு முடிவுசெய்துள்ளது.  

எம்சி சம்பத்

கடந்த 2014 -ம் ஆண்டில், மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்திக்கான தொழில் கொள்கை மற்றும் உயிரி தொழில்நுட்பக் கொள்கை ஆகியவற்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. விரைவில், புதிய வான்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை   வெளியிடப்பட உள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில், 267 ஏக்கர் பரப்பளவில் வான்வெளிப் பூங்கா அமைக்கப்பட்டுவருகிறது. இதுவரை 14 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா, வானூர்திகளுக்கான உதிரிப் பாகங்கள் தயாரிப்பு மையம், திறன் மேம்பாட்டு மையம் ஆகிய வசதிகளைக்கொண்டதாக இருக்கும். சிப்காட் நிறுவனம், இதுவரை 12 மாவட்டங்களில் பசுமையுடன் கூடிய 6 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உட்பட 20 தொழில் வளாகங்கள், தொழிற்பூங்காக்கள் தொழில் வளர்ச்சி மையங்களை உருவாக்கியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement