Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளர்களின் தேங்கிக்கிடக்கும் கேட்பு மனுக்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்கிடவும், ஓய்வூதியத் தொகையை  ரூ 4 ஆயிரமாக உயர்த்தி வழங்கக் கேட்டும் குமரி மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் நாகர்கோவிலில் தொழிலாளர் அலுவலர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலவாரியம்வழி கிடைக்கும் பண பலன்களுக்கு, விண்ணப்பித்து நீண்ட நாள்களாகியும் நல உதவிகள் வழங்காமல், குறைகேட்பு மனுக்கள் நல வாரிய அலுவலகத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக கட்டுமானத் தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் ஓய்வூதிய மனு பரிசீலிக்கப்பட்டு, ஆயுள் சான்று கொடுத்து ஓய்வூதியம் கிடைக்காமல் மேல்முறையீடு செய்தவர்கள், ஓய்வூதியத்துக்காக விண்ணப்பித்தவர்கள் என ஏராளமானவர்களின் மனுக்கள் பரிசீலிக்காமல் நிலுவையில் இருந்துவருகிறது.

கட்டுமானத் தொழிலாளர்களின் தேங்கிக்கிடக்கும் குறை கேட்பு மனுக்களுக்கு, உடனடியாக நிதியுதவி வழங்கிட வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியத் தொகையை ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கக் கேட்டும், குமரி மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் எம்.பி.,பெல்லார்மின், கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினரின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement