இன்று தமிழகம் வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழகம் வருகை தர உள்ளார்.

தமிழக ஆளுநர்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை, சபாநாயகர் தனபால் நேற்று தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தினகரன் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது. இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இன்று அவசர ஆலோசனை நடத்துகின்றனர். அதேபோல, நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டமும் நடக்கிறது.

இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகுறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார். 

ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தியப் பிறகு தமிழகம் வருவதால், ஆளுநரின் இந்த வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!