உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்: விநாடிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு!

பருவமழையின் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியைத் தாண்டியுள்ளது.

மேட்டூர் அணை

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகளிலிருந்து அதிக அளவு உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 51 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், வறட்சியின் காரணமாகக் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், வளிமண்டலத்தின் மேலடுக்குச் சுழற்சியின் காரணமாகப் பெய்த மழையாலும், தீவிரமடைந்துவரும் தென்மேற்குப் பருவமழையாலும் கர்நாடகா பகுதி அணைகளில் நீர் நிரம்பிக் காணப்படுகிறது. இதையடுத்து, கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து அதிகப்படியான உபரி நீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவருகிறது. 

தற்போது, ஓராண்டுக்குப் பின்னர் உயரத் தொடங்கியுள்ளது மேட்டூர் அணையின் நீர்மட்டம். மேட்டூர் அணையின் நீர்வரத்து தற்போது 6,660 கன அடியிலிருந்து 6,757 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும், நீர் மட்டம் 77.80 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 39.79 டி.எம்.சி. நீர் திறப்பு 2000 கன அடியாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!