உள்துறை அமைச்சர் ராஜ்நாத்துடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் ஆலோசனை!

ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் புறப்படும் முன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிற்பகல் 12.40 மணிக்கு தனி விமானம்மூலம் மும்பையிலிருந்து சென்னை வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருக்கிறார். இது, ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும், அரசைக் காப்பாற்றிக்கொள்ள குறுக்குவழியில் முயற்சிசெய்வதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க தொடர்ந்த வழக்கு, நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரங்கள் தொடர்பாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று சந்தித்துப் பேசியிருந்தார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரண்டாவது முறையாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!