Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருநங்கைகளின் ஆவணப்படம் குறித்த 'இடையினம்' ஆப்

எழுத்து, நாடகம், ஆவணப்படம் எனக் கலைகளின் வழியே திருநங்கைகளின் மேம்பாட்டுக்காகப் போராடிக்கொண்டிருப்பவர், ப்ரியா பாபு.  இவர், திருநங்கைகளுக்கான முதல்பாடல் ஆல்பத்தையும் சில நாள்களுக்கு முன்னர் வெளியிட்டார்.  தற்போது  இவர், 'இடையினம்' என்கிற செயலியை உருவாக்கியுள்ளார். 

இடையினம்

இந்தச் செயலியில், திருநங்கைகள் குறித்து  இவர் செய்யும் ஆவணப் படத்தின் ட்ரெய்லரும், கூடுதல் தகவல்களையும் இணைத்துள்ளார். மேலும், இவர் இந்த ஆவணப்படத்தை எங்களுடன் இணைந்து எடுப்பதற்கு நீங்கள் விரும்பினால், எங்களது எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 'திருநங்கைகள்' குறித்து பிஹெச்.டி ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு, இந்தச் செயலி மிகவும் உதவியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

மிகப் பழைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் திருநங்கைகள் குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தத் தகவல்கள் அனைத்தையும் ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்றே, 'திருநங்கைகளுக்கான ஆய்வுக் குழு' ஒன்றை அமைத்துள்ளார்.

திருநங்கைகளைப் பற்றிய சிற்பங்கள், தரவுகளைச் சேகரித்தும்,  கி.மு-விலும் திருநங்கைகள் வாழ்ந்ததற்கான அடையாளம் உள்ளது என்பதையும் நிரூபிக்கும் வகையில், 'இடையினம்' ஆவணப்படம் இருக்கும் எனவும் ப்ரியா பாபு தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement