Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

தமிழகம் வரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி


முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர், நேற்று தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்தார்.


இதையடுத்து, வித்யாசாகர் ராவ் இன்று மதியம் 1 மணி அளவில் சென்னை வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், ராஜ்நாத் சிங்கை இன்று காலை மீண்டும் சந்தித்துள்ளார் வித்யாசாகர் ராவ். இந்நிலையில், சென்னை வரும் வித்யாசாகர் ராவை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாலை 5 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement