அர்ஜூன் சம்பத் மனைவி தற்கொலை முயற்சி!

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மனைவி சுப்புரெத்தினம் 17 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத். இவரின் மனைவி சுப்புரெத்தினம். இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ஓம்கார் பாலாஜி (22), பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகன் பள்ளியில் படித்து வருகிறார். சுப்புரெத்தினம் கோவை குறிச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்றிரவு சுப்புரெத்தினத்துக்கும் மகன் பாலாஜிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சுப்புரெத்தினம்
17 தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!