Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எண்ணெய் கலப்படம் குறித்து புகார் தெரிவிக்க  வாட்ஸ்அப் எண் அறிமுகம்!

 

 

  நம் உடல் நலனுக்கும் நாம் வீட்டில் சமைத்து உண்ணும் சமையல் எண்ணெய்க்கும் நிறைய தொடர்பு உண்டு . சுகாதாரமற்ற எண்ணெயால் அஜீரண கோளாறு , மந்தத் தன்மை உள்ளிட்ட பல பிரச்னைகள் உருவாகும். நாம் வெளியே சென்று சாப்பிடும் ஹோட்டல்களில்கூட சுத்தமான எண்ணெய் பயன்படுத்தப்படுமா என்றால் கேள்விக்குறிதான். பழைய எண்ணெய்களை பயன்படுத்துவதால் உடலுக்கு பல பிரச்னைகளை உருவாக்கும் என்பது உண்மையே. இந்நிலையில், தஞ்சை, ஒரத்தநாடைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் " தமிழகத்தில்   விற்பனை செய்யப்படும் எண்ணெய் பாக்கெட்டுகளின் பின்புறம் சமையலுக்கு உகந்தது அல்ல, விளக்கேற்றுவதற்கு மட்டும், வெளிப்புற பயன்பாடுகளுக்கு மட்டும் போன்ற வாசகங்கள் மிகச்சிறிய அளவில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து அறியாத கிராம மக்கள், அவற்றை உணவுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து பயன்படுத்தும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது. எனவே, நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைத்து தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் எண்ணெய் உட்கொள்ளத் தகுந்ததா? என ஆய்வுசெய்ய உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் வழக்கை விசாரித்தனர். அப்போது, 'உணவு மற்றும் பாதுகாப்புத்துறை ஆணையர் செய்த பிரமாண பத்திரத்தில், எண்ணெய் பாக்கெட்டுகளில் உள்ள வடிவமைப்பு, வாசகங்கள், தவறாக வழிநடத்தும் படம் குறித்து ஆய்வுசெய்யவும் உத்தரவிட்டுள்ளோம். அதை அந்தக் குழு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும். தீப எண்ணெய் , உணவு எண்ணெயில் கலப்படம் குறித்து புகார் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணை ஏற்படுத்தி உள்ளோம். இதுகுறித்து உணவுப் பொருள்கள் தயாரிப்போர் சங்கங்களிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். மாவட்ட வாரியாக உணவுக்கு பயன்படுத்தும் எண்ணெய்கள் தயாரிப்பாளர்களிடம் மாதிரி எண்ணெய்களைப் பெற்று அதை ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் கூறி உள்ளோம்' என தெரிவித்துள்ளனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement