Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஊருக்குள் புகுந்த ரசாயனக்கழிவு! - அலறியடித்து மக்கள் ஓட்டம்

தொழிற்சாலை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ரசாயனகழிவு ஊருக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


  

 கடலூர் சிப்காட்டில் உள்ளது, "லாயல் சூப்பர் பேஃப்ரிக்ஸ்" என்னும் சாயப் பட்டறைத் தொழிற்சாலை. இத்தொழிற்சாலையில் உள்ள ரசாயனக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ரசாயனக் கழிவு, அருகில் உள்ள குடிகாடு கிராமத்துக்குள் புகுந்துள்ளது. இதனால், பல வீடுகள் பாதிப்புக்கு உள்ளானது. இந்தக் கழிவு உடலில் பட்டால், தோலில் அரிப்பு ஏற்பட்டு காயங்கள் உண்டாகும். இதனால், பல தொற்று நோய்கள் பரவ நேரிடும். அதனால், அக்கழிவைக் கண்டதும் கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்துள்ளனர்.  
 

 

 

"ஏற்கெனவே, இந்த சிப்காட்டால் நிலத்தடி நீர், காற்று மாசுபட்டு கர்பப்பை கோளாறு, இருதய நோய், சிறுநீரகங்கள் பாதிப்பு, மூச்சுத் திணறல் என எண்ணற்ற நோய்களால் இன்னல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இது மக்கள் வாழத் தகுதியற்ற இடம் என்று மாசுக் கட்டுபாட்டு வாரியமும் அறிவித்திருக்கிறது. இதேபோல அடிக்கடி ஏதாவது ஒரு தொழிற்சாலையிலிருந்து ரசாயனக் காற்று அல்லது கழிவுநீர் வெளியேறி, மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

இதுகுறித்து, அதிகாரிகளிடமும் ஆட்சியாளர்களிடமும் பல முறை மனு கொடுத்துள்ளோம். அவர்கள், தொழிற்சாலைகள் தரப்பினரின் கவனிப்பில் சைலன்ட் ஆகிவிடுகிறார்கள். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்திடமும் இதுகுறித்து முறையிட்டோம். விரைவில் இதற்குத் தீர்வு கிடைக்கும் என்று உறுதியளித்தார். ஆனால், எதுவும் நடந்தபாடில்லை. எங்களின் வாழ்வாதாரமே இன்குதான். அதனால் இப்பகுதிய விட்டு எங்களால் வெளியேறவும் முடியவில்லை. இப்பிரச்னையிலிருந்து எங்களுக்கு எப்போதுதான் விடிவுகாலம் பொறக்குமோ" என்று புலம்புகின்றனர், கிராம மக்கள்.
                             

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement