Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோயில் பாதாள அறையின் லாக்கரை உடைத்து 82 சவரன் நகை கொள்ளை!

நெல்லை மாவட்டம் உவரி அருகே, கோயிலில் 82 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் கொள்ளைய  டித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

கோயிலில் கொள்ளை

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள நவ்வலடி கிராமத்தில், செண்பக நாச்சியார் கோயில் உள்ளது. பழமையான இந்தக் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நகைகளைக் கோயிலின் உள்ளே இருக்கும் அறையில் பூமியைத் தோண்டி வைக்கப்பட்ட  லாக்கர் உடைக்கப்பட்டு, அதில் இருந்த தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் கொள்ளை யடிக்கப்பட்டன. கோயிலுக்குச் சொந்தமான 83 சவரன் நகைகளும், 2 கிலோ 480 கிராம் வெள்ளிப் பொருள்களையும் மர்ம நபர்கள் அள்ளிச் சென்றனர். கோயிலுக்குச் சென்ற பக்தர்கள், கோயிலின் கதவு உடைக்கப்பட்டு, பொருள்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, கோயிலின் தர்மகர்த்தா செல்வகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், இதுகுறித்து உவரி காவல்நிலையத்தில் புகார்செய்தார். 

கொள்ளை

சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற போலீஸார், அந்தக் கோயிலையும் லாக்கரையும் ஆய்வுசெய்தனர். இந்தத் துணிகரச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்மக் கும்பலைப் பிடிக்க, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement