Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அந்த'த் தவற்றைப் பார்த்ததால் கொல்லப்பட்டான்' - கதறும் தாய்

"தகாத உறவைப் பார்த்ததால் என் மகனைக் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டார்கள். என் மகன் உயிருக்கு நீதி கிடைக்கும் வரையிலும் விடப்போவதில்லை" என்று ஒரு தாய் குமுறுகிறார். இந்தக் கொடூர நிகழ்வு அரியலூர் மாவட்டத்தில்தான்.

அரியலூர் மாவட்டம் புங்கங்குழி ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டக்கோவில் கிராமத்தை சேர்ந்த அன்பழகன்- பாப்பாத்தி தம்பதிக்கு மூன்றாவது மகன் அறிவழகன். இவர் சுண்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்புப் படித்து வந்தார். தந்தை கேரளாவில் தினக்கூலி வேலை செய்துவருகிறார். தாய் பாப்பாத்தி விவசாய வேலையின் காரணமாகத் தனது நிலத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிவந்து பார்த்தபோது வீட்டிலுள்ள இரும்புக் கட்டிலில் குப்புறப்படுத்த நிலையில் அறிவழகன் இருந்துள்ளார். நீண்ட நேரம் எழுந்திருக்காத நிலையில் அறிவழகன் உடலைத் திருப்பிப் பார்த்தபோது கழுத்து மற்றும் கண்ணம் பகுதில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாப்பாத்தி சத்தம் போட்டதையடுத்து அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்துள்ளனர்.

இதையடுத்து, மகனின் மரணத்தில் சந்தேகம் அடைந்த தாய் பாப்பாத்தி, தூத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரை எடுத்துக்கொள்ள காவல்துறையினர் அலட்சியம் காட்டியிருக்கிறார்கள். போராட்டம் நடத்தப்போகிறோம் என்று பொதுமக்கள் கூறியதும் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அறிவழகனின் உடலைக் கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மமான முறையில் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. "9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது நிறம்பிய சிறுவனுக்கு யாரும் எதிரிகள் இருக்கப்போவதில்லை. அவன் வாயிலிருந்து ரத்தம் வடிந்திருக்கிறது. தொண்டை நெறிக்கப்பட்டு காயங்களும் அவனது உடம்பில் இருக்கிறது. அம்மா வேலைக்குச் செல்லும்போது அறிவழகன் தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது டிவி ஓடவில்லை. ஆனால் அவன் இறந்து கிடந்தபோது டிவி அதிக சவுண்டுகளோடு ஓடிக்கொண்டிருக்கிறது. இது எப்படி. சிறுவனின் அப்பா கேரளாவுக்கு வேலைக்கு சென்றுவிடுவார். அம்மாவும் விவசாய வேலைக்குச் சென்றுவிடுவார். லீவு நாள்களில் இவன் மட்டும்தான் வீட்டில் தனியாக இருப்பான். அக்கிராமத்திலுள்ள ஒருவருக்குப் பெண்ணிடம் உள்ள தொடர்பை அறிவழகன் பார்த்துவிட்டதால் வெளியில் சொல்லி விடுவானோ என்ற எண்ணத்தில் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஊர்மக்களே சொல்கிறார்கள். இப்போதுதான் போலீஸ் விசாரணை தொடங்கியிருக்கிறார்கள்" என்று கூறினார்.

இது குறித்து காவல்துறையினரிடம் பேசினோம். "விசாரித்துக்கொண்டிருக்கிறோம். பிறகு பேசுகிறோம்" என்று முடித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement