Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் குழுவிலிருந்து லோதா ராஜினாமா

அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் தேர்வுக் குழுவிலிருந்து, ஆ.எம்.லோதா ராஜினாமா செய்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக் கழகங்களுக்கும் துணை வேந்தர்கள் பதவி காலியாக இருந்தது. துணை வேந்தர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள், ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் 3 பேரைப் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணை வேந்தராக செல்லத்துரை, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக துரைசாமி ஆகியோரை ஆளுநர் நியமனம் செய்தார்.

ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் துணை வேந்தர் நியமனத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களை ஆளுநர் நிராகரித்து விட்டார். அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தரைத் தேர்வு செய்வதற்காக, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் தேர்வுக் குழுவிலிருந்து ஆர்.எம்.லோதா ராஜினாமா செய்துள்ளார். தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்றோர் உறுப்பினருக்கு எதிராக வழக்கு இருப்பதால் லோதா ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement