வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (19/09/2017)

கடைசி தொடர்பு:09:06 (20/09/2017)

மனைவியை எரித்துக் கொன்ற கணவன்: ஹைதராபாத்தில் நடந்த கொடூரம்!

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்ததால், தனது மனைவியை எரித்துக்கொன்ற கணவனையும் அவரின் பெற்றோரையும் ஹைதராபாத் காவல்துறை கைதுசெய்துள்ளது. 

ஹைதராபாத்திலுள்ள ராக் டவுன் காலனியில் வசிக்கும் ருஷி குமார், இரண்டு வருடங்களுக்குமுன், ஹரிகா குமார் என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே ருஷி குமாரும் அவரின் பெற்றோரும் ஹரிகா குமாரை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், ஹரிகா, மருந்துவப் படிப்புப் படிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார். ஆனால், எம்.பி.பி.எஸ் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் இந்த வருடம் அவரால் வெற்றிபெறவில்லை. ஆனால், அவர் பல் மருத்துவம் படிப்புக்குத் தகுதி பெற்றிருந்தார். இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தற்கொலை செய்துகொண்டார் என ருஷி குமாரின் பெற்றோர், ஹரிகாவின் பெற்றோருக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்தனர். ருஷி குமார் குடும்பத்தினரைச் சந்தேகித்த ஹரிகா குமாரின் பெற்றோர், “இது தற்கொலையல்ல; திட்டமிட்டக் கொலை” என்று காவல்துறைக்குப் புகார் அளித்தனர். 

போலீஸார் தொடர்ந்து விசாரித்ததில், ருஷி குமார் தன் மனைவி எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்ததால், எரித்துக் கொன்றார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரும் அவரின் பெற்றோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க