உலகின் வயதான பெண்மணி காலமானார்! | World's oldest lady dies at the age of 117!

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (19/09/2017)

கடைசி தொடர்பு:09:04 (20/09/2017)

உலகின் வயதான பெண்மணி காலமானார்!

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர் வயலட் பிரவுன். உலகின் வயதான மனிதராக அறியப்பட்டிருந்த இவர் இன்று காலமானார். இவர் வயது 117.

உலகின் அதிக வயது வரை வாழும் மனிதர்களில் இத்தாலியைச் சேர்ந்த எம்மா மொரானோ என்ற பெண்மணியே இருந்து வந்தார். இவர் சில தினங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதையடுத்து, உலகில் வாழும் வயதான மனிதராக ஜமைக்காவைச் சேர்ந்த வயலட் பிரவுன் அறியப்பட்டிருந்தார். 1900-ம் வருடம் பிறந்த இவருக்கு இந்த வருடம்தான் 117-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. உலகின் வயதான மனிதருக்கான கின்னஸ் ரெக்கார்டையும் இவர் பெற்றுள்ளார்.

காலமானார்

இவர் பன்றிக்கறி, கோழி இறைச்சியைத் தவிர அனைத்து உணவுகளையும் விரும்பி உண்பதாகக் கூறியிருந்தார். தன்னுடைய உணவுப் பழக்கவழக்கங்களில் இவர் மிகவும் கவனமாக இருப்பாராம். ஜமைக்காவில் தனது 97 வயது மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்த வயலட் பிரவுன் இன்று காலமானார். இவர் விக்டோரியா மகாராணி வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க