Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பல்கலைக்கழக மோசடி - புத்தகம் மூலம் அம்பலப்படுத்தும் பேரா. மு.ராமசாமி

பேராசிரியர் மு.ராமசாமி, 'ஆகாயத்தாமரைகளும் ஆகாத ஊருக்கு வழிகாட்டும் திசைகாட்டிகளும்' என்ற நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டார் மற்றும் நாடகத்துறைகளில் 37 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றி நாடகங்களைப் படைத்தும், திரைப்படங்களில் நடித்தும் வருகிற பேராசிரியர் மு.ராமசாமி எழுதியிருக்கும் இந்நூல், அவர் துறை சார்ந்தது அல்ல. தற்போது  உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிற காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தேர்வில் நடந்த மோசடிகளை அம்பலப்படுத்துகிறது.

மு.ராமசாமி


நம்மிடம் பேசிய மு.ராமசாமி, ''நண்பர்கள் பலர் கூறியதால் காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தேடுதல் குழுவில் நானும் பங்கு பெற்றேன். எங்களுடன் கன்வீனராக நியமிக்கப்பட்ட முருகதாஸ் என்பவரின் நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே வெளிப்படைத்தன்மை இல்லை. அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், ஆளுநர் அலுவலகத்துடன் தொடர்புள்ளவராக இருந்தார். தகுதியில்லாத நபர்களைக் கொண்டுவர முயற்சி செய்தார். நான் பலமுறை அதை எதிர்த்தேன். சரிப்பட்டு வராது என்பதால் ராஜினாமா செய்துவிட்டேன். இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணை வேந்தர் செல்லத்துரைக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு நடந்துவருகிறது. இதில் என் பெயரையும் சேர்த்து தவறான அபிடவிட்டை முருகதாஸ் தாக்கல் செய்துள்ள தகவல் எனக்குத் தாமதமாகக் கிடைத்தது. பதிலுக்கு வழக்குப் போட எண்ணமில்லை, அதனால், நடந்த உண்மைகளை உலகுக்குச் சொல்வோம் என்று அனைத்து ஆதாரங்களையும் இணைத்துப் புத்தகமாக வெளியிட்டுவிட்டேன்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement