வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (19/09/2017)

கடைசி தொடர்பு:08:36 (20/09/2017)

90 மாணவிகளை பலாத்காரம் செய்த வழக்கு..! தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை..!

மதுரை மாவட்டத்தில் 90 பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை பெற்றவருக்குப் பொதுமக்கள் முட்டைவீசி செருப்படி கொடுத்தனர். 

 

மதுரை புதூர் லூர்து நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அவர், 2011-ல் மதுரை பொதும்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது 90 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றுவந்தது. 2017-ம் ஆண்டு முதல், வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்புப் பிரிவில் நடைபெற்றுவந்தது. அதில் 24 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், தலைமை ஆசிரியர் ஆரோக்கிய சாமிக்கு 55 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்க உத்தரவிட்டார். அதையடுத்து ஆரோக்கியசாமியைச் சிறைக்கு  அழைத்துச்சென்றனர். அப்போது சிறை வளாகத்திலிருந்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆரோக்கியசாமி மீது முட்டை வீசி, செருப்படி கொடுத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க