வெளியிடப்பட்ட நேரம்: 21:57 (19/09/2017)

கடைசி தொடர்பு:08:33 (20/09/2017)

மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்ட ஆதித்தனார் சிலை..!

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை சிக்னலில் தினத்தந்தி நிறுவனர் ஆதித்தனாரின் சிலை மீண்டும் நிறுவப்பட்டது. 

ஆதித்தனார் சிலை


சென்னை எழும்பூரில் ஆதித்தனார் சாலையும் பாந்தியன் சாலையும் இணையும் இடத்தில் சுமார் 30 ஆண்டுகளாக ஆதித்தனார் சிலை இருந்துவந்தது. அந்தச் சிலை அமைந்திருந்த இடத்தில் சிக்னல் அமைக்கும் பணிக்காவும் சிலையைச் சுற்றி புல் வெளி போன்ற அமைப்பு ஏற்படுத்துவதற்காவும் சிலை அகற்றப்பட்டிருந்தது. அந்தச் சிலை, அவரது குடும்பத்தாரிடமே கொடுத்துவைக்கப்பட்டிருந்தது. ஆதித்தனாரின் சிலையை அவரது பிறந்தநாளுக்கு முன்னதாக மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் அவரது சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது. ஆதித்தனாரின் பிறந்தநாள் செப்டம்பர் 27-ம் தேதி வரவுள்ளது. அதற்கு முன்னதாக பணிகள் முடிக்கப்பட்டு பிறந்தநாள் அன்று திறக்கப்படும் என்று தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க