Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பசியில்லா மதுரை திட்டத்துக்கு இடையூறு தரும் அதிகாரிகள்; அதிர்ச்சியில் பொதுமக்கள்

கடந்த ஏப்ரல் 17-ம் நாள் மதுரை மாநகராட்சி 'பல கரங்கள்' என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து "பசியில்லா மதுரை திட்டம்" என்னும் திட்டத்தைத் துவக்கியது. மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வரும் உறவினர்களில் பெரும்பாலானோர் அன்றாடம் உணவு இன்றி சிரமப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜாஜி அரசு மருத்துவமனையில் பசியில்லா மதுரை திட்டம் தொடங்கப்பட்டது. பயிற்சி ஆட்சியர் விஷ்ணு சந்திரன் யோசனையில் உருவான இந்தத் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் சந்தீப் தந்தூரி, மருத்துவமனை முன்னாள் டீன் எம்.ஆர்.வைரமுத்து ராஜூ ஆகியோர் தொடங்கி வைத்தனர். இத்திட்டம் மூலம் தினந்தோறும் 500 ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி ஆணையர், உதவி ஆணையர் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனை டீன் ஓய்வு பெற்றதையடுத்து இத்திட்டத்தை முடக்கும் முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபடுவதாக பலகரங்கள் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் புகார் அளிக்கின்றனர். மருத்துவமனை நிர்வாகம் மகப்பேறு பிரிவுக்கு புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளதால் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு தங்குவதற்கு இடம் தேவைப்படுகிறது. எனவே, உணவு வழங்கும் இடத்தை காலிசெய்து தருமாறு வற்புறுத்தி வருகின்றனர். மேலும், உணவு வழங்கும் இடத்தில் மண்ணையும், குப்பையையும் கொட்டி இடையூறு ஏற்படுத்தி வருவதாக புகார் தெரிவித்தனர்.

மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டத்தை ஒரு லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement