Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி நடுவர்மன்றத்தை குழி தோண்டிப் புதைக்கிறது...! மத்திய அரசை விளாசும் பி.ஆர்.பாண்டியன்

’காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்பதா? வேண்டாமா? என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும் என்று சொல்லும் மத்திய அரசின் வாதம் கேலிக்கூத்தானது’ என்றார் அனைத்து விவசாயிகளின் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

காவிரி நடுவர்மன்ற
 

காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரத்தோடு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில்தான் காவிரி நடுவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டது. ஆகையால், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டுமே தவிர, காவிரி நடுவர் மன்றத்துக்கு எதிராக தடை விதிக்கவோ, மறு விசாரணைக்கு உத்தரவிடவோ உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. 

தேவைப்பட்டால் நடுவர் மன்றத்திலேயே மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்துகொள்ளலாம் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைத்து செயல்படுத்துவது மட்டுமே இந்திய அரசின், பாராளுமன்றத்தின் கடமையாக இருக்க வேண்டும்.

அப்படியில்லையென்றால், பாராளுமன்ற ஜனநாயகத்தை மத்திய அரசு குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமமாகும். மத்திய அரசின் வாதம் கண்டனத்துக்குரியது. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்றார் பி.ஆர்.பாண்டியன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement