Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கனமழை எதிரொலி: சென்னையில் தரையிறக்கப்பட்ட மும்பை விமானங்கள்

மும்பையில் கனமழை பெய்துவருவதால், அங்கு செல்ல வேண்டிய 10 விமானங்கள், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன. 


கனமழை காரணமாக, மும்பையில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி இருப்பதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திலும் மழைநீர் தேங்கி இருப்பதால், மும்பை விமான நிலையத்தின் பிரதான ஓடுதளம் மூடப்பட்டது. மும்பை விமான நிலையத்தின் பிரதான ஓடுதளத்தில், 183 பயணிகளுடன் நேற்று தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம், சேற்றில் சிக்கிக்கொண்டது. அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், மும்பையில் தரையிறங்கவேண்டிய 56 விமானங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குத் திருப்பிவிடப்பட்டன. மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கவேண்டிய 10 விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன. மும்பை விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுதளத்தில், மிகமெதுவாக விமானங்கள் இயக்கப்படுகின்றன. கனமழையால், நாட்டின் வர்த்தகத் தலைநகர் மும்பை ஸ்தம்பித்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement