நொய்யலில் பொங்கிய நுரை - மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு!

நொய்யல் ஆற்று நீரின்மேல், வெண்மை நிற நுரைபோல கலந்துசென்றதை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் ஆய்வுசெய்தனர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், நொய்யலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடையாகிப்போன நொய்யலில், அதிக தண்ணீர் வரத்தைக் கண்டு உற்சாகத்தில் மக்கள் ஒருபக்கம் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தாலும், வழக்கம்போல சத்தமே இல்லாமல், சாயக்கழிவு நீரை நொய்யலில் கலந்துவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் சாய ஆலை அதிபர்கள். இப்படி முறைகேட்டில் ஈடுபட்ட 23 சாய ஆலைகளுக்கு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் கடந் தவாரம் சீல் வைத்த நிலையில், தற்போது நொய்யலில் வண்ணங்கள் அற்ற வெண்மை நிறத்தில், நுரைகள் பொங்கிக்கொண்டி  ருப்பது அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தை உண்டாக்கியிருக்கிறது.

இதுதொடர்பாக, பொதுமக்களும் விவசாய சங்கங்களும் தொடர்ச்சியாகப் புகார் எழுப்ப, விஷயத்தைக் கேள்விப்பட்டு, நொய்யலாறு ஓடும் திருப்பூர் மாவட்டப் பகுதிகளில் ஆய்வை மேற்கொண்டார்கள், மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள். ஆய்வுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ''நொய்யல் ஆறு கடந்து செல்லும் நல்லம்மன் தடுப்பணையில், சராசரியாக 7 அடி உயரத்திலிருந்து நீர் கொட்டிவருவதால், நுரை உண்டாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.  இந்த நுரைகள்தான் தண்ணீரில் மிதந்து, அடுத்தடுத்த இடங்களில் உள்ள ஆற்றுப் பகுதிகளில் சென்று குவிகிறது. மழை இல்லாத சமயங்களில், நொய்யலில் விடப்பட்ட  கழிவுநீர்கள், தற்போது வெள்ளத்தால் அடித்து வரப்பட்டுக்கூட, நுரை பொங்குவதற்கான சூழலை உருவாக்கியிருக்கலாம். இதுகுறித்து, தொடர்ந்து ஆய்வு நடத்திவருகிறோம்'' என்றனர்.

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!