Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’தமிழக அரசை டெல்லி இயக்குகிறது!’ - உயர் நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு

எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகினார். அப்போது,’அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரவைத் தலைவர் சபாநாயகராகச் செயல்படாமல், ஒரு கட்சிக்கு ஆதரவாக, கட்சிக்காரர் போல செயல்படுகிறார். முதல்வரை மாற்ற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதால், முதலமைச்சருக்கான ஆதரவை திரும்பப் பெற்றோம். எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க போதிய அவகாசம் அளிக்கப்படவில்லை. 18 எம்.எல்.ஏ-க்களும் அரசுக்கு எதிராக செயல்படவில்லை. மூன்று வார காலத்துக்குள் அவசர கதியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக வேறு ஒருவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம். நாங்கள் எந்த அணிக்கும் கட்சிக்கும் மாறவில்லை. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவளித்தோம். ஆனால், கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?. சபாநாயகர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல. அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டவர். கட்சியின் அடிப்படை உறுப்பினராக நீடிக்கும்போது, கொறடா உத்தரவால் எங்களை எப்படி தகுதிநீக்கம் செய்ய முடியும்?. 

சபாநாயகரின் நடவடிக்கை நீதிக்கு எதிரானது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தை சபாநாயகர் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பாவுக்கு எதிராக எம்.எல்.ஏ-க்கள் கடிதம் அளித்ததையும், அதில் நீதிமன்றம் அளித்த உத்தரவையும் கருத்தில்கொள்ள வேண்டும். எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இந்த வழக்குக்கும் பொருந்தும். தமிழகத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை டெல்லியில் உள்ள சிலர் முடிவுசெய்கிறார்கள் என்று வாதிடப்பட்டது. தற்போதுள்ள அரசியல் சூழலால் டெல்லியில் உள்ள சிலர் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழக அரசை சிலர் டெல்லியிலிருந்து இயக்குகிறார்கள். காலியாக உள்ள தொகுதிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்படாமல் இருக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement