Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ் மொழியை வளர்க்க, நாம் தரமான தமிழ்ப் புத்தகங்களைப் படிக்க வேண்டும்: நீதிபதிகள் கருத்து !

 

விகடன்

கிரானைட் நிறுவனங்களுக்கு எதிராக முதல்முறையாக வழக்குத் தொடர்ந்த மேலூரின் பிரபல வழக்கறிஞர் ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், "1981-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையில் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில், மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது . அதைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், ரூ.25 கோடி மதிப்பில் மதுரையில் கட்டப்பட்ட உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடம், பொது மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்துவைக்கப்பட்டது. இந்தக் கட்டடம் திறக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் தமிழ் மொழியை வளர்க்கும் அளவுக்குத் தரமான நூல்கள் அங்கு இல்லை; அமர்ந்து படிப்பதற்கான வசதிகள் இல்லை; அடிப்படை வசதிகள்கூட இல்லை. இதனால், வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழறிஞர்கள், பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். வெறும் கட்டடம் மட்டும் தமிழ் வளர்ச்சிக்கு உதவாது. எனவே, தரம் வாய்ந்த தமிழ் நூல்களை வைத்து, தேவையான வசதிகளைச் செய்து தர உத்தரவிட வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தப் பொதுநல மனு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சுந்தரேஸ் - சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது.

நீதிபதிகள் தற்போது, தமிழ்ப் புத்தகங்களைப் படிக்க முன்வருவது குறைந்துள்ளது. தமிழ் மொழியை வளர்க்க, நாம் தரமான தமிழ்ப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். மேலும், தமிழராகிய நாம், நம் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்தார்கள். பின்னர், உலகத் தமிழ்ச் சங்கத்தில் தேவையான புத்தகங்களை வைப்பது, வசதிகளைச் செய்துகொடுப்பது சம்பந்தமாக, தமிழ் வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளர் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, மனுவின் மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement