Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விசைப்படகுகள் தங்குகடல் பிரச்னையால் தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகம் மூடல்

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலுள்ள 166 விசைப்படகுகள் மீன்வளத்துறையின் அனுமதியை மீறி தங்குகடலுக்குச் சென்று மீன் பிடித்து வந்ததால் ஒரு மாதம் கடலுக்குள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு இன்று மீன்பிடித்துறைமுகம் மூடப்பட்டது. 

boat strike

தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்தில் மொத்தம் 248 விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகுகள் தினமும் காலை 5 மணிக்குக் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு இரவு 9 மணிக்குள்ளாக கரை திரும்பிவிட வேண்டுமென்பது மீன்வளத்துறையின் விதிமுறை. சில மாதமாக மீன் பாடு அதிகம் இல்லாததால் இரவு 9 மணிக்குள்ளாகக் கரை திரும்பிவிட வேண்டுமென்ற விதிமுறையால் கிடைக்கும் மீன்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் டீசலுக்கும், மற்ற மீனவத் தொழிலாளர்களின் ஊதியத்திற்குமே சரியாகி விடுவதால் இரவில் கடலில் தங்கி மீன் பிடிக்க தங்கு கடல் அனுமதி வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் கடந்த சனிக்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

விசைப்படகு மீனவர்களுக்குத் தங்குகடல் அனுமதி அளித்தால் நாட்டுப்படகு மீனவர்களின் தொழில் பாதிக்கப்படும் என்பதால் தங்குகடல் அனுமதி அளிக்கக் கூடாது என 4 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 3 நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 166 விசைப்படகு மீனவர்கள் அனுமதி பெறாமல் தங்குகடலில் சென்று மீன் பிடித்தனர். மீன்பிடித்துறைமுகத்தின் நுழைவுவாயிலில் கடலுக்குள் சென்று திரும்பும் படகுகள் வரும் கால்வாயின் குறுக்கே மீன்வளத்துறை அதிகாரிகள் இரும்பு ரோப் மூலம் தடுப்பு அமைத்தனர்.  தங்குகடல் சென்று கரைதிரும்பிய விசைப்படகுகள் கால்வாய் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. 

இதற்கிடையில் விசைப்படகு மீனவர்கள், அவர்களின் உறவினர்கள் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. அனுமதியை மீறி தங்குகடலுக்குச் சென்று திரும்பிய 166 விசைப்படகுகளுக்கு உரிய விளக்கம் கேட்டு மீன்வளத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதோடு இன்று முதல் ஒருமாதம் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதற்கு ஆதரவாக மற்ற விசைப்படகுகளும் இன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாலும் மீனவர்களிடையே அசாதாரண சூழல் நிலவியதாலும் இன்று மீன்பிடித்துறைமுகம் மூடப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement