Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எடப்பாடி அலுவலகத்தைப் பூட்டுவோம்! தினகரன் ஆதரவாளர்கள் ஆவேசம்!

தினகரன் அணியில் இருக்கும் 18 எம்.எல்.ஏ-க்களையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் சபாநாயகர் தனபால். இந்நிலையில் இந்தப் பதவி நீக்கம் குறித்து மானாமதுரைத் தொகுதி எம்.எல்.ஏ மாரியப்ப கென்னடியின் அலுவலகம் இன்று பூட்டப்பட்டது. பூட்டுவதற்கு முன் சில மணிநேரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் கேட்டனர். ஆர்.டி.ஓ சுந்தரமூர்த்தி மானாமதுரை தாசில்தார் பொதுப்பணித்துறை அதிகாரிகள் என ஒன்று சேர காலதாமதமானது. அதற்குள் எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் அலுவலகத்துக்குள் உள்ள டிவி கம்ப்யூட்டர் டேபிள் சேர்களை வண்டியில் ஏற்றிக்கொள்கிறோம் அதற்குப் பிறகு, நீங்கள் சீல் வையுங்கள். எம்.எல்.ஏ-க்களை நீக்கியது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது.

அதன் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வந்துவிடும். அதற்குள் நீங்கள் எப்படி சீல் வைக்கலாம். சீல்வைக்கக் கூடாது என்று போராடினார்கள் எம்.எல்.ஏ ஆதரவாளர்கள். ஆனால், ஆர்.டி.ஓ சுந்தரமூர்த்தி, 'சார் கோர்ட் தீர்ப்பு வந்தால் நாங்கள் திறந்து விடப்போறோம். நீங்க ஏன் பொருள்களை எடுத்துட்டு போறீங்க வைச்சுட்டுப் போக வேண்டியதுதானே' என்று பேசியதும் எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இறுதியாக அதிகாரிகள் எம்.எல்.ஏ அலுவலகத்தை இழுத்து திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டினார்கள். அப்போது பேசிய தொண்டர்கள், 'காலம் மாறும் அப்போது எடப்பாடி அலுவலகத்தை நாங்கள் பூட்டுவோம்' என்றார்கள்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement