வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (20/09/2017)

கடைசி தொடர்பு:17:45 (20/09/2017)

பா.ஜ.க-வுக்குச் சாதகமாகச் செயல்பட்டிருந்தால் சசிகலா சிறை சென்றிருக்க மாட்டார் - கம்யூனிஸ்ட் அதிரடி

“பா.ஜ.க அரசுக்குச் சாதமாகச் செயல்பட்டிருந்தால் சசிகலா சிறைக்குச் சென்றிருக்க மாட்டார்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணன் புதுச்சேரியில் தெரிவித்தார்.

புதுச்சேரி, முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த அக்கட்சியின் தேசியச் செயலாளர் நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி காரணமாக மக்களிடம் கடும் வெறுப்பை பெற்றிருப்பதோடு, கடந்த மூன்று ஆண்டுகளாக ஊழல் நிறைந்ததாகவும் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

சசிகலா

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும்தான் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றியிருக்கின்றனர். இதனால் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஜி.எஸ்.டி-யால் நிதி நிறுவனங்கள், பீடி தொழில்கள், துணி உற்பத்தியாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும்தான் ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றது. கார்ப்பரேட் நிறுவனங்களின் வராக் கடன்களைத் திரும்பப் பெறவும் அவர்களின் நிறுவனத்தைக் கையகப்படுத்தவும் தேவையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததுக்கு உச்ச நீதி மன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதை ஆதரிக்கிறேன். விரைவாக மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகலா பா.ஜ.க அரசுக்கு இணக்கமாகச் செயல்பட்டிருந்தால் சிறைக்குச் சென்றிருக்க மாட்டார்” என்று பேசினார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க