வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (20/09/2017)

கடைசி தொடர்பு:18:00 (20/09/2017)

வண்ணமயமாகிறது தூத்துக்குடி மாநகரச் சுவர்கள்!

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதி சுவர்களில் மாவட்டத்தின் சிறப்புகளை உணர்த்தும் ஓவியம் வரையும் பணியை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார்.  

painting work started on thoothukudi wall

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் குப்பைக்குத் தங்கம், தூய்மை தூத்துக்குடி, ஹேப்பி ஸ்ட்ரீட் ஆகிய திட்டங்கள் மூலம் மாநகரப் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மையாக்கிட மாநகராட்சி சார்பிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பாலங்களின் சுவர்கள், அரசு கட்டடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் சுற்றுப்புறச் சுவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்பை உணர்த்தும் ஓவியங்கள் வரையும் பணியை ஆட்சியர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார்.

painting work

 ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் துரையிடம் பேசினோம், ‘‘தூத்துக்குடியிலுள்ள 22 மேல்நிலைப் பள்ளிகளின் ஓவிய ஆசிரியர்களுக்கான கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் 'மாநகரப் பகுதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஓவியங்களை வரையணும். இதனால சுவர்கள் வண்ன ஓவியங்களால் அழகுபட காட்சியளிக்கும். ஒவ்வொரு பள்ளி ஓவிய ஆசிரியர்களும் ஓவியத்தை வரைந்து அழகுபடுத்திடணும்'னு கலெக்டர் சார் சொன்னாங்க. அதன்படி, முதல் கட்டமாக முத்துநகர் பீச் அருகிலுள்ள கால்டுவெல் பள்ளி முன்பாக உள்ள சுவர்களில் ஓவியம் வரைய ஆரம்பிச்சிருக்கோம். இது 400 மீட்டர்  நீளமுள்ள சுவர். இதில் 1.75 மீட்டர் உயரம், 3 மீட்டர் அகலத்தில் தனித்தனி பகுதியாக பிரிச்சுருக்கோம். இந்த ஒவ்வொரு பகுதியிலயும் ஒவ்வொரு ஓவியம்னு மொத்தம் 48 ஓவியம் வரையலாம்.

painting on wall

உப்புத்தொழில், மீன்பிடித்தொழில், முத்துக்குளித்தல், திருச்செந்தூர் கடற்கரை, செம்மண் தேரிக்காடு, வல்லநாடு வெளிமான் சரணாலயம், மணப்பாடு கடற்கரை, ஸ்ரீவைகுண்டம் அணை, மருதூர் அணை, பாரதியார் இல்லம், வ.உ.சி இல்லம், கட்டபொம்மன் கோட்டை என மாவட்டத்தின் சிறப்பை உணர்த்துற ஓவியத்தை வரையச் சொல்லி ஒவ்வொரு ஓவியத்துக்கும் மாதிரி ஓவியத்தை சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடுத்துள்ளார். இன்னும் ஒரு மாதத்துக்குள்ள 48 ஓவியத்தையும் வரைஞ்சு முடிஞ்சுடுவோம். அடுத்தடுத்து மாநகரின் முக்கிய இடங்களிலும் இதே மாதிரி ஓவியம் வரையிறத் திட்டமும் இருக்கு’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க