Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பயிரிடுதலைப் பார்வையிட்டு ஆய்வு செய்த தேனி கலெக்டர்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்துக்குட்பட்ட அரைப்படித்தேவன்பட்டி, கருப்பணத்தேவன்பட்டி, பெரியகுளம் வட்டத்துக்குட்பட்ட சொக்கதேவன்பட்டி, லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் தமிழக அரசின் மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடாசலம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர், ”தமிழக அரசு பெருகி வரும் மக்கள் தொகையின் தேவைக்கேற்ப உணவு தானிய உற்பத்தியைப் பெருக்குவதற்குப் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. நமது மாவட்டத்தில் தோட்டக்கலைப்பயிர்களான மா, வாழை, தக்காளி, வெண்டை, கத்திரி போன்ற காய்கறிகள், மலர்கள் சார்ந்த பயிர்கள், தானியப் பயிர்கள், மருத்துவம் சார்ந்த பயிர்கள் மற்றும் மலைத்தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல நெல், சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்து, பருத்தி மற்றும் கரும்பு ஆகியவையும் பயிர் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நெல் உற்பத்தியைப் பெருக்கிட ஏதுவாக நெல் விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் - நெல் திட்டத்தில் நெல் சான்று விதை விநியோகம், சான்று விதை உற்பத்தியில் மானியம் மற்றும் இயந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.5 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்பட உள்ளது. விதை கிராமத் திட்டத்தில் 50 சதவிகித மானிய விலையில் விதை விநியோகம் செயப்பட உள்ளது. கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு நீடித்த நிலையான கரும்பு சாகுபடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் குழுவாகச் சேர்ந்து பயனடைய ஏதுவாக மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் 100 உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயிர் உற்பத்தியைப் பெருக்குவதற்கான அனைத்து வழிமுறைகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது” எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement