Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.டி.வி.தினகரனைக் குட்டிக் கதை சொல்லி தாக்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

நாகை பைபாஸ் ரோட்டில் மிகப் பிரம்மாண்டமான அரங்கில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரனுக்கு மறைமுகமாகவும், மு.க.ஸ்டாலினை நேரடியாகவும் இடித்துரைத்துப் பேசினார்.  

அந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 20 மண்பாண்டங்களை விற்க முடியாமல் தவித்த குயவன் ஒருவனுக்கு அதனை விற்கும் வாய்ப்புக் கிடைத்தது. வேறுவேலை இருந்தால் பார்த்து வாருங்கள், கொஞ்ச நேரத்தில் நான் எல்லாப் பானைகளையும் அடுக்கி கட்டித்தருகிறேன் என்று கூறி, பானைகளை அடுக்கிக் கட்டிவைத்துவிட்டு அருகில் அமர்ந்தவன் கர்ப்பனையில் மித்தகளானான்.  இதை விற்று அப்பணத்தை பல மடங்காகப் பெருக்கி, இறுதியில் திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்று வாழும்வரை கனவு கண்டான். அக்குழந்தை அழுதுகொண்டே அம்மாவைப் பற்றி குறைகூற, எங்கே உங்கள் அம்மா? என்று எட்டி உதைத்தான்.  20 பானைகளும் உடைந்து அழிந்தன. இப்படித்தான் சிலபேர் கற்பனையில் தானும் கெட்டு, தன்னை நம்பி வந்தவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தான் கெட்டாலும் பரவாயில்லை, பிறரைக் கெடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.  நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்கே தெரியும்' என்றார்.  

அடுத்தாக, அரசு மேடையிலே அரசியல் பேசுகிறோம் என்று எதிர்க்ட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுகிறார்.  ஓர் அரசியல் கட்சியை மையமாக வைத்து எந்த ஆட்சியும் அமையும் என்பது வரலாறு. அந்தக் கட்சியின் வரலாறு, கொள்கைகள், திட்டங்கள் இவைதான் அந்த ஆட்சியின் திட்டமாக இருக்கும். அப்படி அமைந்த அ.தி.மு.க. ஆட்சியில் கட்சியைப் பற்றி பேசுவதில் என்ன தவறு? இவர்கள் ஆட்சியில் அரசு விழாக்களில் பேசவில்லையா? (பைல் ஒன்றைக் காட்டினார்) என்னிடம் ரெக்கார்டு இருக்கு. நாங்க எங்க கட்சியைப் பற்றி பேசினால் உங்களுக்கு ஏன் கோபம்? இந்த ஆட்சியில என்னகுறை கண்டுபிடித்தீர்கள்? எத்தனை முறை சொன்னாலும் பொய் உண்மையாகாது. இந்த ஆட்சி நன்றாக நடைபெறுவதைப் பொறாமையால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. இந்தக் கட்சி உடைந்துவிடாதா என்று கனவு காண்கிறீர்கள்.. ஒருபோதும் உடையாது. அம்மாவின் ஆன்மா சுற்றிச் சுற்றி வந்து இந்த ஆட்சியைக் காப்பாற்றும்' என்று காட்டமாகவே பேசினார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement