Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு விவகாரம் - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு நடைபெற்றுவருகிறது. 

 

ஆளுநர் கிரண்பேடி பரிந்துரையையடுத்து புதுச்சேரி சென்டாக் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் குழு ஜூன் மாதம் 27-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். சோதனைகளின் முடிவில் முக்கிய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி சென்றனர். புதுச்சேரியில் மருத்துவ, பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்படுகிறது.

இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ் மருத்துவப் பட்டமேற்படிப்பு பாடப்பிரிவுகள் சேர்க்கையில் தனியார் மருத்துவக்கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பெருந்தொகை ஊழல், முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. 

இதைத் தொடர்ந்து சென்னை சென்ற சி.பி.ஐ அதிகாரிகள், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் சென்னையிலிருந்து 15 சி.பி.ஐ அதிகாரிகள் குழு, சென்டாக் முறைகேடு தொடர்பாக புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் வீட்டில் தற்போது அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மற்ற அதிகாரிகள் குழுவினர் சென்டாக் அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை சம்பவத்தால், அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement