மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமைத்து நூதன முறையில் போராடிய கிராம மக்கள்

இருபது ஆண்டுகாலம் போராடியும் வீட்டு மனை பட்டா கிடைக்காததால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடுப்பு, காய்கறிகள், அரிசியுடன் வந்து நூதனப் போராட்டத்தை நடத்தினார்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள மானம்பாடி கிராம மக்கள்.

கும்பகோணத்தை அடுத்துள்ள மானம்பாடி கிராமம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு இருக்க இடம்வேண்டுமென கடந்த இருபது வருடங்களுக்கு முன்பிருந்தே தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர், தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் அளித்து வந்தனர். 

 கிராம மக்கள்...

”இலவச வீட்டுமனை பட்டா வழங்காமல் இழுத்தடித்து வந்தனர் அரசு அதிகாரிகள், நாங்களும் ஊரை திரட்டிக்கொண்டு வந்து நிறைய போராட்டங்களில் ஈடுபட்டோம். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாதவர்களாக இருந்துவந்தனர். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. யாரிடமும் போய் எங்களுக்கு குடியிருக்க பட்டா கொடுங்கள் என்று கேட்க முடியவில்லை. இதனால் எங்கள் பகுதியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்யாணத்துக்குப் பெண் கேட்டால் வீடு கட்டுவதற்கு சொந்த இடம் இருக்கான்னு கேட்கிறார்கள். இதனாலே எங்கள் பகுதியில் உள்ள சில பையன்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் நடைபெறவில்லை. அதனால்தான் அரசு அலுவலகத்தில் சமையல் செய்து குடியேறி, நூதனப் போராட்டத்தை நடத்தினோம்” என்றார் மானம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!