Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குடிபோதையில் கொள்ளை முயற்சி - மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!

குடிபோதையில் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட முயன்ற நபரை, பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர், நவீன்குமார். இவர், நள்ளிரவில் தன் பணி முடிந்து அப்பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியின் வழியே வீட்டுக்குத் திரும்பிக்கொண்டு இருந்திருக்கிறார். அச்சமயம், அங்கு அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையத்தில் தொடர்ந்து சத்தம் கேட்டுகொண்டே இருக்க, அதன் அருகில் சென்று எட்டிப்பார்த்திருக்கிறார், நவீன்குமார்.

அப்போது, அந்த ஏ.டி.எம் இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் கடப்பாறையால் உடைத்துக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், ஓடிச்சென்று அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலரை அழைத்துவந்து, மர்ம நபரை மடக்கிப்பிடித்திருக்கிறார்கள். பின்னர், காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்த மர்ம நபரிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது, தன்னுடைய பெயர் சிவசங்கரன் என்றும், சொந்த ஊர் தூத்துக்குடி என்றும் தெரிவித்தார். இவர், திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் தங்கி, பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்ததாகக் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார். நேற்று இரவு அதிகமாக மது அருந்தியதால், குடிபோதையில் என்னசெய்வதென்று தெரியாமல், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்துக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவித்த சிவசங்கரன்மீது, சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்  புகார் அளிக்க, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, சிவசங்கரனைக் கைதுசெய்துள்ளது காவல்துறை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement