Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சி.பி.ஐ ரெய்டுதான் புதுச்சேரிக்கு தீபாவளிப் பரிசு' - கலாய்த்த கிரண்பேடி

சென்டாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுவருவதாக, ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து குற்றம் சுமத்திவருகிறார். இந்நிலையில், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடில் ஈடுபட்டதாக, புதுச்சேரி சுகாதாரத் துறையின் இயக்குநர் மற்றும் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 13 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, “முதுநிலை படிப்புக்கான சென்டாக் கலந்தாய்வின்போது, அதில் முறைகேடு நடப்பதாகப் புகார் வந்தது. அதையடுத்து, நானே சென்டாக் அலுவகலத்துக்குச் சென்று, விதிமீறல்கள்குறித்து கன்வீனரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டும், அவைகளுக்கு சரியான பதில் இல்லை. சென்டாக்மூலம் தேர்வு செய்யப்பட்ட தகுதியான மாணவர்களுக்கு இடம் தர தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மறுத்துவிட்டன. அதற்குப் பிறகு, நானே அனைத்துக் கல்லூரிகளுக்கும் நேரில் சென்று, உச்ச நீதிமன்றம் மற்றும் எம்.சி.ஐ-யின் விதிமுறைகளின்படி மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். அப்படி இருந்தும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், புதுச்சேரியில் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் முறைகேடில் ஈடுபட்டதாக, சி.பி.ஐ 13 பேர் வழக்குப்பதிவு செய்ததோடு, பல்வேறு அதிகாரிகளின் வீட்டில் ரெய்டும் நடத்திவருகின்றனர். சி.பி.ஐ-யின் இந்த நடவடிக்கையால், இனிவரும் காலங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பது, முறைகேடுகள், இடையில் கட்டணத்தை உயர்த்துவது போன்றவை தடுத்து நிறுத்தப்படும். இந்த சி.பி.ஐ ரெய்டுதான் புதுச்சேரிக்கான தீபாவளிப் பரிசு” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement