Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேலம் ரயில் கொள்ளை: விசாரணைக்காக பீகார் விரைந்த தனிப்படை

சேலம் ரயில் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீஸார் பீகார் விரைந்தனர். 


கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 9ல், சேலத்திலிருந்து வங்கிப் பணத்துடன் சென்னை வந்த விரைவு ரயிலின் மேற்கூரையைத் துளையிட்டு, மர்ம நபர்கள் 5.75 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக, கடந்த ஒரு வருட காலமாக தனிப்படை போலீஸார் விசாரித்துவருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட ரயில் பெட்டி, கேரளாவிலிருந்து கோவை, ஈரோடு வழியாக சேலம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிடப்பட்டது குறித்தும், கொள்ளை நடந்த பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்புகளைத் தொகுத்து, அதுகுறித்தும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்துவருகின்றனர். அதில், பீகாரைச் சேர்ந்த 4 பேர் மீது சந்தேகம் இருப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், பீகார் விரைந்துள்ள சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீஸார், உள்ளூர் போலீஸார் உதவியுடன் சந்தேகப்படும் 4 நபர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர். கொள்ளை நடந்து ஓராண்டுக்குப் பின்னர், இந்த வழக்கில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement