Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செந்தில் பாலாஜி தலைமறைவு... குண்டாஸ் சட்டம் பாய்கிறது?

                                        எம்.எல்.ஏ.செந்தில்பாலாஜி

 குண்டாஸ் ஆக்ட் தன்னுடைய அடுத்த வேட்டையை ஆரம்பித்துள்ளதாகவே அரசியல் வட்டாரத்தில் கருதுகிறார்கள். மிழக முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜியைக் கைதுசெய்த கையோடு அவரைக் குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க முடிவாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு அடுத்து, தங்க தமிழ்ச்செல்வன், பெரம்பூர் வெற்றிவேல் ஆகியோர்தான் 'ஹிட்' லிஸ்ட்டில் உள்ளனராம். தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமியின் கொங்கு மண்டலத்துக்காரர்தான் இந்த செந்தில்பாலாஜி. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமன ஆணை தருவதாகக் கூறி 6 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூலித்ததாக இவர்மீது புகார்கள் எழுந்துள்ளன.  

தமிழகக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் முன்னாள் சீடரான இவரைத்தான் 'முதலில் எடப்பாடி பழனிசாமி, அவர் இல்லையென்றால், செந்தில் பாலாஜி' என்று முதலமைச்சர் இருக்கைக்கு டோக்கன் போட்டு வைத்திருந்தார் சசிகலா. திடீர் திருப்பமாக எடப்பாடிக்குப் பொற்கதவு திறக்கப்படவே, செந்தில் பாலாஜி சைலன்ட் ஆனார். அடுத்ததாக, கட்சியில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் என்று அணிகள் இரண்டாகி நின்றன. சசிகலா- தினகரன் அணி, மூன்றாவது அணியானது. செந்தில் பாலாஜி, மூன்றாவது அணியாகத் தோன்றிய சசிகலா  அணிக்கு ஆதரவு கொடுத்தார். கூவத்தூர் காட்சிகள் போன்று கர்நாடகாவின் 'குடகு' ரிசார்ட் காட்சிகள் அரங்கேறியபோது, செந்தில் பாலாஜி வலம் வந்தார். இந்தச் சூழ்நிலையில்தான் செந்தில் பாலாஜிமீதான மோசடிப் புகார் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் வெங்கடாசலம் தலைமையிலான போலீஸார், கர்நாடகா மற்றும் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, மில், உறவினர்கள் வீடு என்று அவருக்குத் தொடர்புள்ள அத்தனை இடத்துக்கும்போக ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களுக்கு முன்னோ பின்னோ என்பது மட்டும் உறுதியாகத் தெரியவில்லை. இதே இடங்களுக்கு வருமான வரித்துறையினரும் போயிருக்கிறார்கள். இப்போதைக்கு, செந்தில் பாலாஜிமீது 408, 420 ஆகிய பிரிவுகளின் கீழ்தான் வழக்கு என்றாலும்,  மேலும் சில பிரிவுகளை அதில் சேர்க்கவும் முடிவாகியுள்ளதாம். 

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில், "வட்டிக்குக் கடன் கொடுத்துவிட்டு அதை வசூலிக்கும்போது மோசடியாகக் கணக்குகளை எழுதி வசூலித்ததாக சினிமா பைனான்ஸியர் முகுந்த் சந்த் போத்ரா மீது முதலில் 420 ஐ.பி.சி-தான் போடப்பட்டது. அடுத்து, வழக்கின் போக்குக்கு ஏற்ப 465, 467, 468, 471, 506(2) மற்றும் கந்துவட்டி தடுப்புச் சட்டம் (2003) போன்ற பிரிவுகளின் கீழ் செக்‌ஷன்கள் கூடிக்கொண்டே போயின. முடிவில், குண்டாஸ் ஆக்டில் போத்ரா கொண்டுவரப்பட்டுவிட்டார். செந்தில் பாலாஜியும், இப்படி குண்டாஸ் ஆக்ட்டில் உள்ளே போக முகாந்திரம் இருக்கிறது" என்கின்றனர். இப்போதுள்ள கணக்குப்படி மொத்தமுள்ள எம்.எல்.ஏ-க்களில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் செந்தில் பாலாஜிக்கு அடுத்து தங்க தமிழ்ச்செல்வன், பெரம்பூர் வெற்றிவேல் ஆகியோர்தான் தினகரன் அணியில் தீவிரமாகச் செயல்படுகிறார்கள் என்பதால், அவர்களை நோக்கி போலீஸ் பார்வை திரும்பியுள்ளது'' எனக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement