Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்த நீராட ஆன்லைன் டிக்கெட்: அறநிலையத்துறை ஆணையர் தகவல்

ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தங்களில் நீராட ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை ஆணையர் ஜெயா தெரிவித்தார்.


தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் ஜெயா இன்று ராமேஸ்வரம் வந்திருந்தார். இங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்தங்கள், கோயிலில் மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள், பக்தர்களுக்குத் தேவையான வசதிகள், தங்கும் விடுதிகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ராமேஸ்வரம் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் சிரமமின்றி நீராடவும், அதற்கான டிக்கெட்டுகளைப் பெறவும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையைத் தவிர்க்கும் வகையில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும் தீர்த்தம் ஆடுவதற்கான டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பெறவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். 

ராமேஸ்வரம் கோயிலில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

இவை தவிர கோயிலின் உட்பிரகாரப் பகுதிகளில் உப்புக் காற்று மற்றும் தொடர்ச்சியாக ஓடும் தீர்த்த நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தொல்லியல் துறை விதிகளுக்கு உட்பட்டு சீரமைப்பதுடன், நவீன முறைகளைக் கொண்டு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம். மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தற்போது யாத்திரா நிவாஸ் கட்டப்பட்டு வருகிறது. இது தவிர 'ராமாயண சர்க்யூட்' என்ற பெயரில் அனைத்து வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். கோயிலில் நிலவும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் பற்றாக்குறையைக் களைய விரைவில் நடவடிக்கை எடுப்பதுடன், பழுது ஏற்பட்டதால் இயக்கப்படாமல் உள்ள தங்க ரதத்தை விரைவில் சரி செய்து தங்க ரத புறப்பாடு நடக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயிலுக்குச் சொந்தமான சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்றார்.

தீர்த்தங்களை ஆய்வு செய்த ஆணையர்

ஆணையருடன் மாவட்ட ஆட்சியர் நடராஜன், கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, தக்கார் ராஜா குமரன் சேதுபதி,  உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், கோயில் பேஷ்கார்கள் கஹாரின், கமலநாதன், அண்ணாதுரை, கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement