33% இட ஒதுக்கீடு: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் | sonia gandhi writes to Modi on getting women reservation bill passed

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (21/09/2017)

கடைசி தொடர்பு:18:15 (21/09/2017)

33% இட ஒதுக்கீடு: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் மசோதாவை அமல்படுத்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

சோனியா காந்தி

1996-ம் ஆண்டு தேவ கவுடா தலைமையிலான அரசு அறிமுகப்படுத்திய மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2010-ம் ஆண்டு மாநிலங்களவையில் பல வலதுசாரிக் கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறியது. அதன்பின் கிடப்பில் போடப்பட்டுள்ள இந்தச் சட்டத்தை, பா.ஜ.க-வுக்கு மக்களவையில் தற்போதுள்ள மெஜாரிட்டியைப் பயன்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என்றும் இதற்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்றும் மோடிக்கு சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இடத்தைப் பெண்களுக்கு உறுதி செய்யும் இந்தச் சட்டம் பெண்கள் முன்னேற்றத்தில் ஒரு மிகப்பெரிய படியாக இருக்கும் என்றும் சோனியா காந்தி அதில் குறிப்பிட்டுள்ளார்.