சுற்றுச்சூழல் போராளி முகிலன் கைதின் பின்னணி!

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், கடந்த 18-ம் திங்கட்கிழமை இரவு திடீரென கைது செய்யப்பட்டு தற்போது பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

mukilan arpattam

தூத்துக்குடி மாவட்டத்தில், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளின் தேவைக்காக  நிலத்தடி நீரை ஆழ்த்துளைக் கிணறுகள் மூலமாக உறிஞ்சி சட்டவிரோதமாக டேங்கர் லாரிகள் மூலம் வணிக நோக்கில் சப்ளை செய்யப்பட்டு வருவதைக் கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும், நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு இயக்கத்தினர் கடந்த 19ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் ஆடு, மாடுகளுடன் குடியேறும் போரட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதில் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் கலந்து கொள்ள எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் தெஹ்லான் பாக்கவி, பச்சைத்தமிழன் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆகியோருடன் முகிலனும் கலந்து கொண்டனர்.

 mukilanதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் இணைந்த அனைவரும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அங்கிருந்து கிளம்பி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவதாக திட்டம் வகுத்திருந்தனர். ஆனால், ஸ்ரீவைகுண்டத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கும் போதே அனைவரையும் கைது செய்து புதுக்குடியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாலை வரை போலீஸார் வைத்தனர். பின்பு, மாலை 6.15 மணிக்கு அனைவரையும் போலீஸார் விடுதலை செய்தனர். அவர்களை விடுவித்த அரை மணி நேரத்தில் பின் தொடர்ந்து ஆழ்வார்திருநகர் பகுதியில் வைத்து முகிலனை மட்டும் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் முகிலனை பாளையங்கோட்டை சிறையில் சந்தித்து வந்த தோழர்களிடம் பேசியபோது, ‘’ தோழர் முகிலன் அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இது தொடர்பாக அரசு அமைத்துள்ள ஒருநபர் விசாரணை கமிஷன் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் மதுரைக்கு வரவுள்ள நிலையில், அந்த விசாரணைக் கமிஷன் முன்பு முகிலன் ஆஜராகி சாட்சியம் அளிக்கக் கூடாது என்பதால்தான் கூடங்குளம் வழக்கு வாரண்ட்டை அவசரகதியாக காரணமாகக் காட்டி அவரைக் கைது செய்துள்ளார்கள். தோழரைச் சிறையில் சந்தித்தபோது அவர் இதை எங்களிடம் கூறினார்’’ எனக் கூறினர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!