வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (06/09/2012)

கடைசி தொடர்பு:15:30 (06/09/2012)

இமானுவேல் சேகரன் நினைவு நாள்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:  இமானுவேல் சேகரன் நினைவு நாளை அமைதியாக நடத்த ஒத்துழைக்க  வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பரமக்குடியில் பலத்த பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் வருகிற 11-ம் தேதி  அனுசரிக்கப்படுகிறது.கடந்த ஆண்டு நினைவு நாளின்போது பரமக்குடியில் நடந்த  துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியானார்கள்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் இருந்த 4 போலீஸ் அதிகாரிகளை  இடமாற்றம் செய்யக்கோரி புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவராமன்  ஆகியோர் அடங்கிய அமர்வு,"இமானுவேல் சேகரன் நினைவு நாளை அமைதியாக நடத்த  தேவையான பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.அதை அரசு  உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் அன்றைய தினம் நடைபெறும் நினைவு நாள் நிகழ்ச்சியை அமைதியாக  நடத்துவதற்கு கிராம மக்களும்,பல்வேறு இயக்கங்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு  அளிக்க வேண்டும்”என்று உத்தரவிட்டனர்.

பலத்த பாதுகாப்பு

இதனிடையே இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி பரமக்குடியில் பலத்த  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்