Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அன்புக் கரங்கள் தன்னார்வ அமைப்பைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர்!

ராமநாதபுரம் அம்மா பூங்கா வளாகத்தில் 'அன்புக் கரங்கள்' தன்னார்வ உதவி அமைப்பை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் மாவட்ட வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் அம்மா பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு வயது முதிர்ந்தோர், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் வயது வேறுபாடின்றி காலை மாலை வேலைகளில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அம்மா பூங்காவின் நுழைவு வாயிலில் மாவட்ட ஆட்சியர் நடராஜனின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் 'அன்புக் கரங்கள்' எனும் தன்னார்வ தொண்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வசதி வாய்ப்பு உள்ளவர்கள் தாங்கள் உபயோகித்த தங்களுக்குப் பயன்படாத நிலையில், வசதி வாய்ப்பு அற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் உள்ள பொருள்களைத் தன்னார்வமாக அளிக்கும் வகையில் இந்த அன்புக் கரங்கள் அமைப்பு செயல்பட உள்ளது.

அன்பு கரங்கள் தன்னார்வ அமைப்பினை துவக்கி வைத்த ஆட்சியர் 

உடைகள், புத்தகங்கள், விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் என அனைத்து வகையான பயன்பாட்டு பொருள்களையும் இந்த அமைப்பிடம் வழங்கலாம். இவ்வாறு பெறப்படும் பொருள்கள் பற்றிய விவரங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதுடன், அவற்றின் தேவை உள்ள ஆதரவற்ற, வசதி வாய்ப்பற்றவர்களுக்கு முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அன்புக் கரங்கள் மையத்தைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் நடராஜன் பயனாளிகளுக்குத் தேவையான பொருள்களையும் வழங்கினார். விருப்பம் உடையவர்கள் இந்த அன்புக் கரங்கள் அமைப்பிடம் பயன்படுத்தப்பட்ட அல்லது புதிய பொருள்களை, பிறருக்கு உதவும் வகையில் அன்புக் கரங்கள் அமைப்பிடம் செலுத்த வேண்டுகோள் விடுத்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமையின் இயக்குநர் தனபதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உமா மகேஸ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் செல்லத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement