Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜல்லிக்கட்டு நீதி விசாரணை ஆணையம் மதுரைக்கு வருகிறது

ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தின் இறுதி நாளான ஜனவரி 23-ம் தேதி  சென்னை, கோவை, மதுரை உட்பட தமிழகத்தின் பல நகரங்களில் கலவரம் ஏற்படக் காரணம் என்னவென்பதை விசாரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காகவும், ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான ஒருநபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்தது. 

ஜல்லிக்கட்டு


இக்கமிஷன் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம், பார்த்தவர்களையும் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய அறிவித்தது. அந்த அடிப்படையில் 1949 பிரமாண பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. அந்தப் பத்திரங்களின் உண்மைத்தன்மை அடிப்படையில் புகார்தார்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் வர உத்தரவிட்டது. சென்னை, கோவையில் முதற்கட்ட விசாரணைகளை முடித்த விசாரணை ஆணையம், அடுத்தகட்டமாக வருகிற அக்டோபர் நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி வரை மதுரையில் விசாரணை நடத்தவுள்ளது.  இதில் மதுரை மற்றும் இந்த வட்டாரங்களைச் சேர்ந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அக்டோபர் நான்கு முதல் அரசு விருந்தினர் மாளிகையில் செயல்படும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் என்று மதுரை மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement